

பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் பூச்சி மருந்தை குடித்தார்.
பயிர்க் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனே வழங்கக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை சார்பில் கோவில்பட்டியில் காத்திருப்புப் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.
கோட்டாட்சியர் அனிதா தலை மையில் அதிகாரிகள் நேற்று விவசாயிகளை அழைத்து பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற் படாததால் போராட்டம் தொடர்ந்தது. நேற்று மாலை விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
அப்போது பிள்ளையார்நத் தத்தை சேர்ந்த கந்தசாமி மனைவி கிருஷ்ணம்மாள் (70) என்பவர் பூச்சி மருந்தை குடித்தார். சக விவசாயிகள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரு கின்றனர்.