Published : 19 Jul 2017 09:14 AM
Last Updated : 19 Jul 2017 09:14 AM

சென்னையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறி வாலயத்தில் நாளை நடக்கிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழ கன் நேற்று வெளியிட்ட அறிக் கையில், “திமுக மாவட்டச் செய லாளர்கள் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 20-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலை ஞர் அரங்கில் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ‘முரசொலி’ நாளிதழ் பவள விழா, நீட் தேர்வு ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று முடிவடைய உள்ள நிலை யில் திமுக மாவட்டச் செய லாளர்கள் கூட்டம் நாளை நடை பெறவுள்ளது. திமுகவின் அதி காரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’ தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறு வதை முன்னிட்டு பவள விழா கொண்டாட முடிவு செய்யப்பட் டுள்ளது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர் களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதமாகியுள்ளது. நீட் தேர்வால் பிளஸ் 2 தேர்வில் 196-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள்கூட மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. அந்த மாணவர்களில் பலர் நேற்று முன்தினம் மு.க.ஸ்டா லினை சந்தித்து இதற்காக போராட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து சட்டப் பேரவையில் இப்பிரச் சினையை எழுப்பி திமுக வெளிநடப்பு செய்தது. இப்பிரச்சினையில் மாணவர் களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x