

திருப்பதியில் கடந்த 14-ம் தேதி கடத்தப்பட்ட 9 மாத குழந்தை நாமக்கல் மாவட்டம் சிங்களாந்த புரம் பகுதியில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்தியதாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் உரவகொண்டா, சாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷா. இவர் கடந்த 14-ம் தேதி திருமலைக்குச் சென்றுள்ளார். அப்போது வெங்க டேஷாவின் 9 மாதக் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
புகாரின் பேரில் திருமலையில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, குழந்தையைக் கடத்திய இருவர் குறித்து அடை யாளம் தெரியவந்தது. தொடர் விசாரணையில், குழந்தையை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி கடத்தியது தெரியவந்தது. இந்நிலையில், குழந்தையை கடத்திய தம்பதி, போலீஸார் தேடுவதை அறிந்து பேளுக்குறிச்சி காவல்நிலையத்தில் குழந்தை யுடன் சரணடைந்தனர்.
அவர் களிடம் நடத்திய விசாரணையில் பேளுக்குறிச்சியைச் சேர்ந்த அசோக் (24) மற்றும் அவரது மனைவி தங்காயி (24) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு குழந்தையில்லாததால், இந்த குழந்தையைக் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, ஆந்திர போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.