

அயனாவரம் நாகேஸ்வரா குரு சாமி தெரு பகுதியில் வசித்து வருபவர் குளோரியா (33). முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்த தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். ஜெய லலிதாவுக்கு சிகிச்சை அளித்த குழுவில் அவர் இடம் பெற்றி ருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குளோரியா நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்த பழைய மாத்திரை களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குளோரியாவை அவரது உறவினர்கள் மீட்டு மருத் துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அயனாவரம் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குளோரியாவின் கணவர் விஜய குமார். இவர்களுக்கு பிரவீன் குமார் (7), சுஜித் (6) என 2 மகன் கள் உள்ளனர். கடந்த 4 மாதங் களுக்கு முன்னர் விஜயகுமார் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி மதியம் பிரவீன் குமார், சுஜித் இருவருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குளோரியாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது கணவரின் இறப்பு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உள் ளிட்ட விவகாரத்தில் சந்தேகத்துக் கிடமான நிகழ்வுகள் ஏதே னும் நடந்துள்ளதா என விசா ரித்து வருகிறோம். அவர் ஜெய லலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவில் இருந்தாரா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.