Published : 21 Jul 2017 09:43 AM
Last Updated : 21 Jul 2017 09:43 AM

எம்எல்ஏக்கள் தங்கும் விடுதி உட்பட மத்திய அதி தீவிரப் படை போலீஸார் சென்னையில் திடீர் ஆய்வு

சென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும் விடுதி உட்பட பல்வேறு இடங்களில் மத்திய அதி தீவிரப் படை போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை யின் ஒரு பிரிவான அதி தீவிரப் படையினர் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி கோவையில் உள்ள அதிதீவிரப்படை வீரர்கள் 37 பேர் சென்னை நகரில் துணை கமாண் டண்ட் ரஜிதா தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மெரினா காவல் நிலையம் அருகில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம், திருவல்லிக்கேணி தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம், அண்ணா சாலையில் உள்ள அரசு பன்நோக்கு மருத்துவமனை, ஓமந் தூரார் தோட்டத்தில் உள்ள எம்எல் ஏக்கள் தங்கும் விடுதி, தனியார் வணிக வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நெருக்கடி காலங்களில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து உள்ளூர் காவல் துறை யினருடன் ஆலோசனை நடத்தியதுடன், சில அறிவுரைகள் வழங்கியதாக துணை கமாண்டண்ட் ரஜிதா தெரிவித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 நாட்கள் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் ஆய்வுகளை முடித்த பின்னர் அதிதீவிரப்படையினர் கோவை செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x