Published : 09 Jul 2017 10:10 AM
Last Updated : 09 Jul 2017 10:10 AM

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சிக்கினார்: ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் சென்னையில் கைது - என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையில் இருந்து இலங் கைக்கு தப்பிச்செல்ல முயன்ற ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவா ளரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டி கொடுத்தவர்கள், அந்த அமைப்பில் சேர முயன்றவர்கள் என 6 பேர் தமிழகத்தில் இதுவரை கைதாகியுள்ளனர் இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைதாகியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்தவர் சுல்தான் அகமது (25). இவர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர் பில் இருந்துள்ளார். இவரை மத்திய உளவுப்பிரிவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரகசியமாக கண் காணித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல கடந்த 6-ம் தேதி மாலையில் சென்னை பன்னாட்டு விமான நிலைய பகுதிக்கு வந்தார் சுல்தான் அகமது. மாலை 4 மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் அவர் டிக்கெட் பதிவு செய்திருந்தார். இதை தெரிந்து கொண்ட மத்திய உளவுத்துறையினர் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத் தனர். அதைத் தொடர்ந்து டெல்லி யில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரி கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வழக்கமான பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு சென்னை சர்வதேச விமான நிலைய பகுதியில் அமர்ந்திருந்த சுல்தான் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சிறிது நேரத்தில் அங்கு வந்த மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அஸ்ஸாம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சில தீவிரவாத சம்பவங்களுக்கும் சுல்தான் அகமதுவுக்கும் தொடர்பு உள்ளது. இவர் இணையதளம் மூலம் ஐஎஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும், அந்த அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிர்வாகிகள் சிலர் இவருடன் பேசியுள்ளனர். கடந்த 4 மாதங்களாகவே இவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். இந்நிலை யில், வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றதால் கைது செய்ய வேண் டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x