ரயில்வே துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் ஆள்சேர்ப்பு

ரயில்வே துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் ஆள்சேர்ப்பு
Updated on
1 min read

ரயில்வே துறை தனது ஆள் சேர்ப்பு முறையை டிஜிட்டல் தொழில்நுட்ப முறைக்கு மேம்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ரயில்வே துறை தனது ஆள் சேர்ப்பு முறையை டிஜிட்டல் தொழில்நுட்ப முறைக்கு மேம்படுத்தி உள்ளது. இதன் மூலம் வெளிப்படை தன்மையும் பயன்திறனும் அதிகரித்துள்ளது.

ரயில்வே தேர்வு வாரியம் உலக அளவில் மிகப்பெரிய கணினி வழி தேர்வை 92 லட்சம் நபர்களுக்கு நடத்தியுள்ளது. இந்த தேர்வு, நாடு முழுவதும் 351 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், லட்ச தீவுகள் மற்றும் அந்தமான் தீவுகள் அடங்கும்.

பிரதமரின் கனவான டிஜிட்டல் இந்தியாவை நனவாக்கும் வகையில், உதவி ரயில் நிலைய அதிகாரிக்கான இரண்டாவது கட்டமாக எழுத்து தேர்வு மற்றும் மூன்றாவது கட்டமாக இயல்திறன் தேர்வு மற்றும் அமைச்சகம் சார்ந்த தட்டச்சு திறன் தேர்வும் கணினி வழி தேர்வை 45,989 நபர்களுக்கு நடத்பட்டுள்ளது.

முறையாக இயல்திறன் தேர்வும் தட்டச்சு திறன் தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த டிஜிட்டல் மாற்றத்தால், இந்த இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. பாரம்பரிய முறையில் இந்த தேர்வு நடைபெற்றால், இதற்கு இரு மாதங்கள் தேவைப்படும். இதனால், கணிசமான அளவில் நேரமும் வளங்களும் சேமிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in