

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் புனரமைப்புப் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு கோயில் இணை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீரங்கம் திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவைத் தலைவர் ஏ.கிருஷ்ணமாச்சாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயில், 108 திவ்யதேசங்களில் முதன்மை யானது. இக்கோயிலை பூலோக வைகுண்டம் என அழைக்கின்ற னர். கோயிலில் ராமானுஜர் பிருந்தாவன் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி பல நூறு ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியங் கள் இருந்தன. புனரமைப்பு என்ற பெயரில் அந்த ஓவியங்களை அழித்துவிட்டனர். கோயிலில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை. கோயில் முழுவதும் 700 கல்வெட்டுகள் உள்ளன.
தற்போது ரங்கநாதர் கோயிலில் அவசரகதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு முன் கோயில் ஆகமவிதிகள், வரலாறு, பாரம் பரியம் தெரிந்த நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து, அந்தக் குழு தெரிவிக்கும் ஆலோசனை யின் பேரில்தான் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண் டும். ஆனால், ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வாறு ஆலோசனைக்குழு அமைக்காமல் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியில் பிள்ளை லோகாச்சாரியார் சந்நதியில் உள்ள கல்வெட்டுகளை அழித்து விட்டனர். தென்கலை திருமண் காப்பு வடிவத்தை இடித்து விட்டனர். இந்த செயல்களால் பக்தர்கள் மனம் புண்படுகின்றனர். எனவே, தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், அனைத்துத் துறை வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக்குழு அமைத்து, அக்குழு தெரிவிக்கும் ஆலோசனையின் பேரில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந் தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தன பாலன், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிந்தராஜன், வல்லுநர்கள் ஆலோசனையின்பேரில், கோயிலின் புனிதம் பாதிக்கப் படாதவாறு புனரமைப்புப் பணி கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கோயில் புனரமைப்புப் பணிகளுக்கு ஆலோசனை தெரிவித்தவர்கள், பணியில் ஈடுபடுவோரின் திறன் மற்றும் அவர்களுக்குரிய கோயில் வரலாறு, கல்வெட்டின் தொன்மை, பாரம்பரியம் குறித்த அறிவு தொடர்பாகவும், பணிகள் தொடர்பான புகைப்படங்களையும் நவ. 12-ல் தாக்கல் செய்ய கோயில் இணை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.