Published : 30 Jul 2017 11:31 AM
Last Updated : 30 Jul 2017 11:31 AM

நாங்குநேரி நீதிமன்றம் அருகே பரபரப்பு: போலீஸாரை வெட்டி கைதியை தப்ப வைத்த கும்பல் - காவல் ஆய்வாளர் இடமாற்றம்

திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரியில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சித் தலைவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது, போலீ ஸாரை வெட்டிய ஒரு கும்பல், கைதியை தப்ப வைத்த சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள சிறுமளஞ்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரம் என் பவர், மஞ்சங்குளம் அருகே உள்ள குளத்தில் வண்டல் மண் அள்ள அனுமதி பெற்றுள்ளார். இவரிடம், மஞ்சங்குளம் கிரா மத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தங்கள் பகுதி குளத்தில் மண் அள்ளுவதற்கு பணம் தர வேண்டும் எனக் கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி, மறுகால்குறிச்சி முன் னாள் ஊராட்சித் தலைவர் உதயகுமாரிடம், சண்முகசுந்தரம் புகார் கூறியுள்ளார்.

கடந்த 27-ம் தேதி நள்ளிரவு, சூரங்குடி கிராமத்தில் உள்ள ஆறுமுகத்தின் அண்ணன் சுடலைக் கண்ணு வீட்டுக்கு உதயகுமார் உட்பட 30 பேர் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை யின்போது தகராறு ஏற்பட்டு, சுடலைக்கண்ணுவின் வீடு, அங் கிருந்த சரக்கு ஆட்டோ ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. சுட லைக்கண்ணு குடும்பத்தினர் அங்கிருந்து தப்பினர்.

இது தொடர்பாக, முன்னாள் ஊராட்சித் தலைவர் உதயகுமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் புஷ்பபாண்டி உட்பட 30 பேர் மீது, நாங்குநேரி இன்ஸ் பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் வழக்கு பதிவு செய்தார்.

100 பேர் திரண்டனர்

உதயகுமார் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் கைது செய் யப்பட்டு, உடனடியாக நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். நீதி மன்றம் அருகில் கைதியுடன் போலீ ஸார் காத்திருந்தபோது, பெண்கள் உட்பட சுமார் 100 பேர் அங்கு திரண்டு வந்துள்ளனர். போலீஸ் வாகனத்தில் இருந்த உதயகுமாரை தப்ப வைத் துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி

இதைத் தடுக்க முயன்ற போலீஸ்காரர்கள் கருணைராஜ், சதீஷ்குமார் ஆகியோர் கத்தியால் வெட்டப்பட்டனர். இதில், இரு வருக்கும் கையில் காயம் ஏற் பட்டது. மேலும், அப்பகுதியில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. கூடுதல் போலீஸார் வருவதை அறிந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். காயம் அடைந்த 2 போலீஸாரும், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர். இச்சம்பவம் தொடர் பாக சிலரைப் பிடித்து, போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய திரு நெல்வேலி எஸ்.பி. அருண் சக்திகுமார், பிரச்சினையை சரியான முறையில் கையாள வில்லை என்ற குற்றச்சாட்டில், நாங்குநேரி போலீஸ் இன்ஸ் பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டரை, பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x