

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தடை உள்ளது. கடந்தாண்டு சென்னை புறநகர் பகுதிகளில் சில குட்கா நிறுவனங் களில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனையின்போது, அமைச்சர், அதிகாரிகளுக்கு குட்கா, பான்மசாலா விற்பனையை அனு மதிக்க லஞ்சம் கொடுக்கப்பட்ட தாக ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக புகார் கூறியது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா விசாரணை நடத்தி யுள்ளதுடன், தமிழக அரசிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் கூறப் பட்டது. இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் சிஎச்.வித்யா சாகர் ராவும் தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், திமுக எம்எல்ஏக் கள் சேகர்பாபு, தாயகம் கவி, ரவிச் சந்திரன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலர் அலுவலகத்தில், அவர் இல்லாத நிலையில் கடிதம் ஒன்றை அவரது உதவியாளரிடம் அளித்து சென்றுள்ளனர். அதில், குட்கா விவ காரம் தொடர்பான புகார் இடம் பெற் றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.