

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இவருக்கு கடந்த சில தினங்களாக கண்ணில் பிரச்சினை இருந்து வந்தது. இந் நிலையில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் மு.க.ஸ்டா லின் சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனைக்குச் சென்றார். டாக்டர்கள் குழுவினர் அவரது கண்ணை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பகல் 11 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு புறப் பட்டார். டாக்டர்களின் ஆலோ சனைப்படி மு.க.ஸ்டாலின் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.