

மேட்டூர் அணை நீர்வரத்து 2,687 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.
வறட்சி காரணமாக நீர்வரத்து குறைந்திருந்த நிலையில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. விநாடிக்கு 37 கனஅடி என்ற நிலையில் இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1,912 கனஅடியாக உயர்ந்தது.
கடந்த ஒரு மாதமாக 100 அடிக்கும் குறைவாகவே நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அணை நீர்மட்டம் 20.48 அடியாக இருந்தது.
அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தை விட, நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்து 21.09-யாக உயர்ந்தது. மேலும், நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,687 அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியுள்ளது. இதையடுத்து, பண்ணவாடி பகுதி ஆற்றில் பரந்து பாய்ந்தோடி வரும் நீர்.