நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல்கட்டமாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. இன்னும் 10 கேமராக்கள் ஓரிரு நாட்களில் பொருத்தப்படுகிறது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, ரயில் நிலையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட 43 ரயில் நிலையங்களில் 2016 டிசம்பர் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்தனர்.

கொலை நடந்து ஓராண்டுக்கு பிறகும் அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல்கட்டமாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 சிசிடிவி கேமராக்கள் ஓரிரு நாளில் பொருத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே பாது காப்பு படை அதிகாரிகள் கூறு கையில், ‘‘30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக் கள் பொருத்த இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் 10, நடை மேம்பாலத்தில் 3 என மொத் தம் 13 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளோம். அடுத்த ஓரிரு நாளில் 10 கேமராக்களை பொருத்தவுள்ளோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in