Published : 15 Jul 2017 08:51 AM
Last Updated : 15 Jul 2017 08:51 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் மின் ஆவணக் காப்பகத்தின் (Digital Locker) மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு மதிப்பெண் சான்றிதழ் களை மின் ஆவணக் காப்பகம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் மாணவர்கள் மின் ஆவணக் காப்பகத்தின் இணையதளத்துக்குள் (www.digilocker.gov.in ) சென்று, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தி மின் ஆவணக் காப்பகக் கணக்கை முதலில் தொடங்க வேண்டும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கப்படாத பட்சத்தில் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்து மின் ஆவணக் காப்பகக் கணக்கை தொடங் கலாம்.

மின்னணு மதிப்பெண் சான்றிதழ் களை மின் ஆவணக் காப்பகக் கணக்கு மூலமாகப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை யின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்,

மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இச்சான்றி தழை இணையதள வழியாகவும் சமர்ப் பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மின்னணுச் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுவதால், மதிப் பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x