தமிழக சட்டப்பேரவையை முடக்க கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: அரசியல் சாசனத்துக்கு எதிரான கோரிக்கை என நீதிபதிகள் கருத்து

தமிழக சட்டப்பேரவையை முடக்க கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: அரசியல் சாசனத்துக்கு எதிரான கோரிக்கை என நீதிபதிகள் கருத்து
Updated on
2 min read

நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெறுவதற்காக அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் எதிரொலியாக தமிழக சட்டப்பேரவையை முடக்கக் கோரி டிராபி்க் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப் பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் வெற்றி பெறுவதற்காக அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுக்க பணபேரம் நடத்தப்பட்டதாக தனி யார் தொலைக்காட்சி ஒன்று மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணனின் வீடியோ உரை யாடலை சமீபத்தில் ஒளிபரப்பியது.

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுத்து தான் தனது அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் கே.பழனிசாமி வெற்றி பெற வைத்துள்ளார்.

எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தமிழக சட்டப் பேரவையின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என கடந்த ஜூன் 14-ம் குடியரசுத் தலைவர், ஆளுநர், தமிழக தலைமைச் செய லாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் பேரவைத் தலைவர் உள்ளிட் டோருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக சட்டப்பேரவையை முடக்க உத்தரவிட வேண்டும் ’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘நம் பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏ-க்கள் பணம் பெற்றதாக மனுதாரர் கூறுகிறார். இந்த தகவல் அவருக்கு எங்கிருந்து கிடைத் தது என்பதை அவர் கூறவில்லை. அவர் எம்எல்ஏ-வும் இல்லை. சட்டப்பேரவையில் பல மசோதாக் கள் வாதம் நடைபெறாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனு தாரர் கூறியுள்ளார். பெரும் பான்மை இல்லாமல் எந்த மசோதா வையும் நிறைவேற்ற முடியாது.

ஆதாரங்கள் இல்லை

அதுபோல முதல்வர் கே.பழனி சாமி மற்றும் அவருடைய தரப் பினர் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாகவும் எவ் வித ஆதாரங்களையோ அல்லது ஆவணங்களையோ மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. மேலும் சட்டப்பேரவையை முடக்க வேண்டு மென்ற கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

ஜெயலலிதா புகைப்படத்தை வைக்கலாமா?

‘‘குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை, ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் தங்களது சட்டைப் பாக்கெட்டிலும், வாகனங்களின் முகப்பிலும், அரசு அலுவலகங்களிலும், சட்டப்பேரவைக்குள்ளும் வைத்துள்ளனர். இது சட்டவிரோதம்’’ என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தமிழக சட்டப் பேரவையைக் கலைக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் தனது தரப்பு வாதமாக முன்வைத்தார்.

அதற்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘ தங்களது மூத்த கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை எம்எல்ஏ-க்கள் வைத்துக் கொள்வதற்கு எந்த சட்டம் தடை செய்கிறது என்பதை மனுதாரர் கூறவில்லை. மேலும் ஒரு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாமா? வேண்டாமா? என்பதை இந்த நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in