ஆ.ராசா மீதான மேட்டுப்பாளையம் வழக்கு தள்ளுபடி: திமுகவினர் கொண்டாட்டம்

ஆ.ராசா மீதான மேட்டுப்பாளையம் வழக்கு தள்ளுபடி: திமுகவினர் கொண்டாட்டம்
Updated on
1 min read

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளிடக்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிட்டார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக பணியாற்றிய ராணி என்பவரை ஆ.ராசா உள்ளிட்ட 41 திமுக வினர் கூட்டாக சேர்ந்து கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு, இது தொடர்பான வழக்கு கடந்த 21.7.2014 அன்று பதியப்பட்டது.

இவ்வழக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கபட்டிருந்தது.

இதனையடுத்து இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆ.ராசா உள்ளிட்ட திமுக வினர் நேரில் ஆஜராகினர். இதன் பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இவ்வழக்கை தள்ளுபடி செய்து, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஆ.ராசா, ''வேண்டுமென்றே என் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுவிக்கப்ட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆ.ராசா உள்ளிட்ட 41 பேர் மீது போட்டபட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து நீதிமன்ற வாசலில் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் திமுக வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in