

தேனாம்பேட்டை காவல் நிலை யத்தில் வீசப்பட்டது மண்ணெண் ணெய் நிரப்பிய பாட்டில் என்றும், அதை வீசியவர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடக்கிறது என்றும் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை காவல் நிலையத் தில் பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது மக்களி டையை அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு முதல்வர் கே.பழனிசாமி யின் பதில்: தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத 2 நபர்கள், மண்ணெண்ணெய் நிரப் பப்பட்ட மதுபாட்டில் ஒன்றை எரியூட்டிய நிலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அது காவல் நிலைய வாசலில் விழுந்து எரிந்துள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் உடனடியாக தீயை அணைத்துள்ளார். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமரா பதி வுகளை எடுத்து காவல் துறை ஆய்வு செய்கிறது. சந்தே கப்படும்படியான 12 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வ தாலும், தூசு படிவதாலும் கண்காணிப்பு கேமராக்களில் உருவம் சரியாக தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர்ந்து நடப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குறிப்பிட்டார். இது தவறான கருத்து. சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வரு கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.