

சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:
வி.ஜி.ராஜேந்திரன் (திமுக):
வண்டலூர் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதாக கூறி 88.52 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடக்கவில்லை. அதேபோல, மாதவரம் அருகில் இணைப்புப் பேருந்து நிலையத்துக்கு ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டது. அப்பணி கள் நடந்துள்ளதாக தெரிய வில்லை. சிஎம்டிஏவில், கட்டிட அனுமதிக்காக விண்ணப்பிக் கும்போது, பல்வேறு நிலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதில் காலதாமதம் ஆகிறது. இதை தவிர்த்து 30 நாட்களில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்:
வண்டலூரில் முதலில் பேருந்து நிலையம் அமைக்க அறிவிக்கப்பட்ட இடத் தில் நிலம் கையகப்படுத்தும் பணி கள் நடந்தன.
அப்போது நில உரிமையாளர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இடம் கைவிடப்பட்டது. தற்போது வண்டலூர் கிளாம் பாக்கம் அரு கில் ஜிஎஸ்டி சாலையில் 88.57 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு சிஎம்டிஏ விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்கான விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
மாதவரம் இணைப்புப் பேருந்து நிலையத்தை பொறுத்த வரை ரூ.95 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அடித்தளம் அமைக்கும் பணிகள் முடிந்துள் ளன. இதுவரை ரூ.47 கோடி செல விடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் கட்டிட வரைபட அனுமதியில் உள்ள சிரமங்களை தீர்க்க, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காகத் தான் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.