

பல்லாவரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்லாவரம் அடுத்த திரிசூலம், அம்மன் நகர் பகுதியில் ஏற் கெனவே 2 அரசு டாஸ்மாக் கடை கள் உள்ளன. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் அப்பகுதி யில் மீண்டும் ஒரு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக திறந்த கடை மற்றும் ஏற்கெனவே உள்ள 2 கடைகளையும் சேர்த்து அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.