வரலாறு காணாத வறட்சி காரணமாக சதுரகிரி மலையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: இரவில் தங்குவதை தவிர்க்க பக்தர்களுக்கு வேண்டுகோள்

வரலாறு காணாத வறட்சி காரணமாக சதுரகிரி மலையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: இரவில் தங்குவதை தவிர்க்க பக்தர்களுக்கு வேண்டுகோள்
Updated on
1 min read

கோடை காலம் முடிவடைந்த பின்பும் மழையின்மை, கடும் வெயில் தொடர்வதால் சதுரகிரி மலையில் வரலாறு காணாத வறட்சி காணப்படுகிறது. காட்டாறுகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், அமாவாசைக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு இரவு தங்குவதைத் தவிர் க்க கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 23-ம் தேதி நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவுக்காக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, கோடை முடிந் தும் தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாகவும், சதுரகிரி மலை பகுதியில் மழை பெய்யாத காரணத்தாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காட் டாறுகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. மலைப் பகுதி யில் அதிகமாகக் காணப்படும் குரங்குகள், காட்டுப் பன்றிகள், காட்டு மாடுகள் போன்றவை தண்ணீர் தேடி அடிவாரப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பக்தர்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியா மல் கோயில் நிர்வாகமும், வனத்துறையும் திணறி வருகி ன்றன. தங்களுக்கு வேண்டிய குடிநீரை தாங்களே கொண்டு செல்லவும், இரவு நேரத்தில் மலையில் தங்குவதைத் தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையில் வழக்கமாக செயல் பட்டு வரும் அன்னதானக் கூடங்களுக்கே போதிய தண்ணீர் இல்லாததால், திருவிழாவையொட்டி புதிதாக அன்னதானம் வழங்க இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் ஒவ்வொரு அரை கி.மீ.க்கும் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதி செய்துதர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், சுந்தர மகாலிங்கம் கோயிலில் 85 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், சந்தன மகாலிங்கம் கோயிலில் 35 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஆடி அமாவாசைக்கு வரவுள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் குடிநீர் தேவையை இது பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in