

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு செட் டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இதற்காக சந்தாதாரர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் பணி, இன்று தொடங்கி ஆக.16 வரை நடைபெற உள்ளது.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமம் வழங்கி உள்ளது.
இந்நிலையில், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எத்தனை செட் டாப் பாக்ஸ்கள் தேவை என பதிவு செய்திருக்கிறார்களோ, அத்தனை சந்தாதாரர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், மின் அஞ்சல், செல்போன் எண், செட் டாப் பாக்ஸ் வகை, வீட்டு உபயோகத்துக்காகவா அல்லது வணிக பயன்பாட்டுக்காகவா என்பன உள்ளிட்ட விவரங்களை இன்று (17-ம் தேதி) முதல் பதிவு செய்யலாம். வரும் ஆக.16 வரை இந்த பதிவை மேற்கொள்ளலாம் என உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களை தமிழக அரசு கேபிள் டிவி அறிவுறுத்தியுள்ளது.