

சிறுதானியங்களில் நுண்ணூட்டச் சத்து அதிகமுள்ள புதிய பயிர் ரகங்களை கண்டுபிடிக்க தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் ரூ.6 கோடியில் புத்தாக்க மகத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வரும் 21-ம் தேதி முதல்வர் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 12 அரசு வேளாண்மை கல்லூரிகள், 25 தனியார் வேளாண்மை கல்லூரிகள் உள்ளன. வேளாண்மையில் கல்வி, வேளாண்மையில் ஆராய்ச்சி, வேளாண்மையில் விரிவாக்கம் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு, வேளாண்மை பல்கலை க்கழகமும், அதன் உறுப்பு கல்லூரிகளும் செயல்படுகின்றன.
இங்கு தமிழகத்தின் மழையளவு, மண்ணின் தன்மை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற கூடுதல் மகசூல் தரும் ரகங்களை கண்டுபிடிப்பது, இருமடங்கு உற்பத்தி, மும் மடங்கு வருவாய் என்ற அடிப் படையில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்த ஆராய்ச்சி களில் கண்டுபிடிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை, ரகங் களை விவசாயிகளிடம் நேரடி யாகவும், வேளாண்மைத் துறை மூலமும் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளிலும் வேளாண் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் நிதியை வேளாண் பல்கலைக்கழகத்துக்கும், அதன் கல்லூரிகளுக்கும் வழங்குகிறது.
இந்நிலையில் தென்தமிழ கத்தில் வேளாண்மையையும், அதன் ஆராய்ச்சிகளை யும் ஊக்குவிக்க தேசிய வேளாண்மை அபிவிருத்தி இயக்கம் சார்பில் மதுரை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் சிறுதானியங்களில் நுண்ணூட்டச்சத்து அதிகமுள்ள புதிய பயிர் ரகங்களை கண்டுபிடி க்கவும், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் ரூ.6 கோடியில் புத்தாக்க மகத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் கட்டுமானப்பணி நிறைவு பெற்றுள்ளது. வரும் 21-ம் தேதி முதல்வர் மூலம் திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதுகுறித்து உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் செந்தில் கூறியதாவது:
வேளாண்மை கல்லூரியில் இதுவரை வேளாண்மை விரிவாக் கத்துக்கான ஆராய்ச்சிகள் மட்டுமே நடந்தது. தற்போது எந்த மரபணு குறியீட்டால் பயிர்களில் நோய் வருகிறது, அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும், அதற்கான தீர்வு என்ன என்பது போன்ற உயர் ரக ஆராய்ச்சிகள் நடக்கும்.
இந்த புதுவகையான அடிப்படை ஆராய்ச்சிகள், பிற்கால ஆராய்ச்சிகளுக்கு அடித்த ளமாகவும், சிறுதானியங்களில் அதிக நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய புதிய பயிர் ரகங்களை கண்டுபிடிக்கவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் தென் தமிழகத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பல்துறை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இந்த மகத்துவ மையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக இன்வர்ட், ப்ளோரோசன்ஸ், எக்ஸ்ரே ப்ளோரோசன்ஸ் இமேஜின் போன்ற உயர்ரக மைக்ரோஸ் கோப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன.
மதுரை வேளாண்மை கல்லூ ரியில் முனைவர், முனைவர் பட்டமேற்படிப்பு மாண வர்கள், பெரிய அளவிலான ஆராய்ச்சிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழகத்துக்கு சென்று வந்தனர். இனி இந்த மாணவர்கள் மதுரை வேளாண்மை பல்கலைக் கழகத்திலேயே அனைத்து வகையான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளலாம்.
அதனால், இனி அதிகளவி லான வேளாண்மை ஆராய்ச்சி களும், அதன் அடிப்படை யிலான கட்டுரைகளும் மதுரை வேளாண் கல்லூரியில் வெளி யாக வாய்ப்புள்ளது. ஒரு பல்கலைக்கழகம், கல்லூரியில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அடிப்படையாக கொண்டு அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் அந்த கல்லூரிக்கு ‘ரேங்க்’ பட்டியல் கிடைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுவரை வேளாண்மை விரிவாக்கத்துக்கான ஆராய்ச்சிகள் மட்டுமே நடந்தது. தற்போது எந்த மரபணு குறியீட்டால் பயிர்களில் நோய் வருகிறது, அதற்கான காரணங்கள் என்ன, அதற்கான தீர்வு என்ன என்பது போன்ற ஆராய்ச்சிகள் நடக்கும்.