

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் ஆதரவு எம்எல்ஏக்கள், நேற்று திடீர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னையன், மைத்ரே யன் எம்பி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் மற்றும் செம்மலை உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதிமுக உட்கட்சி விவகாரம், சட்டப்பேரவையில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதங்களில் எப்படி நடந்துக்கொள்வது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடு கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.