

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் நேற்று பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் திருமணம் பதிவுச் சட்டப்படி ஒரு மாதம் கழித்து நடைபெற உள்ளது.
சமூக உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா, மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தினார்.
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர் தலில் தோல்வியடைந்த அவர். சில மாதங்களாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். அயர்லாந்து நாட்டை சேர்ந்த அவரது காதலர் தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவும் உடன் தங்கியுள்ளார்.
கொடைக்கானல் எனக்கு மிகுந்த மன அமைதியைத் தருகிறது. இங் கேயே திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவர் தெரிவித்திருந் தார். இந்நிலையில், நேற்று அவர் களது திருமண விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர், ‘சட்டப்படி உடனடியாக உங்கள் திரு மணத்தை பதிவு செய்ய முடியாது. அறிவிப்பு வெளியிடப்பட்டு, எதிர்ப்பு இல்லாத நிலையில் 30 நாட்கள் கழித்துதான் பதிவு செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு 30 நாட்கள் கழித்து வருவதாக கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர்.
மணிப்பூரில் ராணுவத்தினர் அடக்குமுறையை எதிர்த்து, புதிய வழியில் போராடப் போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.