

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைப்பது சந் தேகம்தான் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறிய தாவது: தற்போது அதிமுகவில் உருவாகியுள்ள கோஷ்டி பிரச்சினைகளை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். 4 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி கவிழ்ந்தால், திமுக ஆட்சிக்கு வந்துவிடும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தில் பாகிஸ் தான் ஆதரவு அமைப்புகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்கெனவே கூறி இருக்கிறோம்.
ஸ்டாலினுக்கு பக்குவம் தேவை
திமுகவில் ஸ்டாலினின் உழைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், அவருக்கு பக்குவம் தேவை. எதிர்காலமே இல்லாத நிலையில் திமுக சென்று கொண்டிருக்கிறது. மாட்டு இறைச்சி விவகாரத்தில் வந் துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது அல்ல.
மாவோயிஸ்ட்டுகள் முடக்கம்
காவிரி பிரச்சினையில் நிரந்தர மான தீர்வை ஆணையம் எடுக்கும் முன்பாக, உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மகிழ்ச்சி அடை வேன். இந்த விஷயத்தில் மத்திய அரசின் பின்னணி எதுவும் கிடையாது. பாஜக ஆட்சியில் மாவோயிஸ்ட்டுகள் 80 சதவீதம் முடக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.