Published : 31 Jul 2017 10:53 AM
Last Updated : 31 Jul 2017 10:53 AM

தாமிரபரணியை காக்க போராடிய நயினார் குலசேகரன் காலமானார்

 

தாமிரபணி நதியை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்திய சி.நயினார் குலசேகரன் (94) நேற்று காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் அருகேயுள்ள நட்டாத்தி கிராமத்தை சேர்ந்த இவர், தனது இளம் வயதில் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நிலச் சுவான்தார்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மீட்டுக் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் நலச் சங்கத்தை அமைத்து கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவையை அமைத்து, தூத்துக் குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளைக்கு எதிராகவும், விவ சாயிகளுக்கு கிடைக்க வேண் டிய பாசன உரிமைகளைப் பெறு வதற்காகவும், தொழிற்சாலை களுக்கு தண்ணீர் வழங்குவதை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தினார். ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிக்காக பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார்.

பொதுநலனுக்காக தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட நயினார் குலசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அதிகாலை நட்டாத்தியில் உள்ள அவரது இல்லத்தில் கால மானார். இறுதிச்சடங்கு மாலை 5 மணிக்கு நட்டாத்தி கிராமத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. சண்முக நாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் சி.த. செல்லப்பாண்டியன், சுடலை யாண்டி, மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர், விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர், தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x