Published : 14 Jul 2017 10:03 AM
Last Updated : 14 Jul 2017 10:03 AM

10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்; மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட் டுள்ள 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடிய தால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கதிராமங்கலம் அய்யனார் கோயி லில் கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறும்போது, “இந்த மண்ணையும், மக்களையும் காப் பாற்றுவதற்காக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடை பெற்று வருகிறது. ஆனால், தமிழக அரசும், மத்திய அரசும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது.

ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என போராட்டம் நடத்திய 10 பேரை போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.

போராட்டக் குழு

இதற்கிடையே, திருவிடைமரு தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செ.ராமலிங்கம், திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோ.ரவிச்சந்திரன் ஆகி யோர் போராட்டம் நடைபெற்ற இடத் துக்கு நேற்று வந்தனர். பொது மக்களிடம் அவர்கள் பேசும்போது, “கதிராமங்கலத்தில் தற்போது உள்ள நிலைமை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என கடந்த 6-ம் தேதியே தமிழக சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடிதம் கொடுத் துள்ளனர்.

ஆனால், இதுவரை அதற்கு அரசிடம் இருந்து பதில் இல்லை. எனவே, பொதுமக்கள் ஒரு போராட்டக் குழுவை அமைத் தால்தான், கோரிக்கையை உரிய இடத்தில் சொல்ல முடியும்” என்றனர்.

மனித உரிமை கூட்டமைப்பினர்

மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை யில் அக்குழுவினர் கதிராமங்கலம் மக்களைச் சந்தித்தனர். பின்னர், அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எங்களிடம் எடுத்துரைத்தனர். இங்கு நடந்த சம்பவங்களை அப்படியே நாங்கள் பதிவு செய் துள்ளோம். அதை அறிக்கையாக தயாரித்து விரைவில் மத்திய, மாநில அரசுகளுக்கு அளிப்போம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடருவோம்” என்றார்.

இதற்கிடையே, மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் கிடைத்ததால், கதிரா மங்கலம் செல்லும் வழியான சிவராமபுரம், கொடியாலம், திருக் கோடிக்காவல் உள்ளிட்ட இடங் களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்தத் தக வலை அறிந்த மாணவர்கள், நேற்று கதிராமங்கலம் வருவதை தவிர்த்துவிட்டனர்.

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், நேற்று வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி நுழைவுவாயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ‘கதிராமங்கலம் கிரா மத்தைவிட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்’ என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

கோட்டாட்சியர் அலுவலகம்

பின்னர், அங்கிருந்து மயி லாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸார், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனை வரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x