

தேனாம்பேட்டை காவல் நிலைய வளாகத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையின் மையப் பகுதி யில் அண்ணா மேம்பாலம் அருகே தேனாம்பேட்டை காவல் நிலையம் உள்ளது. இதைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்படு கின்றன. 500-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. இதனால், இந்தப் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், நேற்று அதி காலை 4 மணி அளவில் பைக்கில் வந்த 2 பேர், பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்களை காவல் நிலைய வளாகத்துக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டு, காவல் நிலையம் முன்புறம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங் கள் மீது பட்டு சிதறியது. இதில், 3 பைக்குகள் லேசான சேதம் அடைந்தன. இரவுப் பணியில் இருந்த போலீஸார், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குற்ற வாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீஸார் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளிகளின் உருவம் தெளிவாக தெரியவில்லை.
இதையடுத்து காவல் நிலை யத்தைச் சுற்றியுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதே காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு போலீ ஸாரின் 7 வாக்கி டாக்கிகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.