

திருப்பூர் அனுப்பர்பாளையம். இங்கே, திரும்பிய பக்க மெல்லாம் ‘டொக், டொக்’ சத்தம், பத்துக்கு ஒரு வீட்டிலாவது சின்னதாய் ஒரு பட்டறை; அங்கு ஓரிருவராவது உட்கார்ந்து பாத்திரத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘இந்தச் சத்தத்துல மக்கள் எப்படி நிம்மதியாய் வசிக்கிறாங்க?’’ என்று கேட்டால், “இதென்னங்க சத்தம்..? அந்தக் காலத்துல ஊரேல்ல சத்தமா கெடக்கும்..” என்று இழுவையைப் போடுகிறார்கள் அனுப்பர்பாளையத்து மக்கள்.
காரைக்குடி அடுக்கு, கும்பகோணம் சால், சென்னை குத்துவிளக்கு இவைகள் எப்படிப் பிரபலமோ அதுபோல, எவர் சில்வர், பித்தளை, தாமிரம் கொண்டு தயாரிக்கப்படும் அனுப்பர்பாளையம் பானை, குடம், டேக்சா (வாய் அகன்ற பாத்திரம்), பராத்து (பெரிய தட்டு) உள் ளிட்டவை மிகப் பிரபலம்.
500 பட்டறைகள் இருந்த ஊர்
அனுப்பர்பாளையத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாத்திரம் அடிக்கும் பட்டறைகள் ஐநூறுக்கும் மேல் இருந்தது; ஐயாயிரம் பேருக்கு மேல் வேலை செய்தார்கள். ஆனால், இப்போது நூறு பட்டறைகள்கூட தேராது போலிருக்கிறது. இதற்குக் காரணம், பிளாஸ்டிக், மற்றும் பயன்படுத்தித் தூக்கி எறியும் ஒருமுறைப் பயன்பாட்டுப் பொருட்களின் வரத்து அதிகமானதே என்கிறார்கள் இங்கே பாத்திரத் தொழிலில் இருப்பவர்கள்.
“எங்க கன்னார் செட்டியார்களுக்கு இதுதான் குலத்தொழில். பின்னலாடை தொழிலில் பிரபலமாவதுக்கு முந்தி, பாத்திரத் தொழிலுக்குத்தான் பிரபலமான ஊரா இருந்துச்சு திருப்பூர். எங்க தாத்தா மாணிக்கம் செட்டியார் ஆரம்பிச்ச பட்ட றையில் அவருக்குப் பின்னாடி எங்க அப்பா, அவரத் தொட்டு மூணாவது தலை முறையா நான் உட்காந்துருக்கேன். சின்னப் பையன்லருந்தே இந்தத் தொழிலைக் கத்துக் கிட்ட நான், பித்தளை, எவர்சில்வர், செம்பு குண்டான்களை விதவிதமா செஞ்சுருக்கேன். சென்னை, திருச்சி நகரங்கள் மட்டுமில்லாம கேரளாவிலிருந்தும் வந்து எங்களிடம் ஆர்டர் கொடுக்குறாங்க.
வாரம் ஐயாயிரம் சம்பாதிக்கலாம்
எங்கள மாதிரி பட்டறைகள்ல கூலிக்காரங்க நல்லா வேலை செஞ்சா வாரம் ஐயாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு பீஸுக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துருவோம். ஸ்டீலும் பித்த ளையும் கிலோ என்ன விலை விற்கிறதோ அதுக்கேத்த மாதிரி பாத்திரங்களோட விலையும் ஏறும் இறங்கும். எங்களுக்கு ஸ்டீல் கிலோ 200 ரூபாய்க்கு வந்துச்சுன்னா, அதை பாத்திரமாக்கி கிலோ 400 ரூபாய் விலை வைப்போம்” என்கிறார் இங்கே நாற்பது ஆண்டுகளாக பாத்திரத் தயாரிப் புத் தொழிலில் இருக்கும் குப்புசாமி.
அனுப்பர்பாளையத்துக்கு வந்த சோதனை
எங்கள மாதிரி பட்டறைகள்ல கூலிக்காரங்க நல்லா வேலை செஞ்சா வாரம் ஐயாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு பீஸுக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துருவோம். ஸ்டீலும் பித்த ளையும் கிலோ என்ன விலை விற்கிறதோ அதுக்கேத்த மாதிரி பாத்திரங்களோட விலையும் ஏறும் இறங்கும். எங்களுக்கு ஸ்டீல் கிலோ 200 ரூபாய்க்கு வந்துச்சுன்னா, அதை பாத்திரமாக்கி கிலோ 400 ரூபாய் விலை வைப்போம்” என்கிறார் இங்கே நாற்பது ஆண்டுகளாக பாத்திரத் தயாரிப் புத் தொழிலில் இருக்கும் குப்புசாமி.
“அனுப்பர்பாளையத்தில் பாத்திரத் தொழில் ஏன் தேய்வை நோக்கிச் செல்கிறது?” இந்தக் கேள்விக்கும் குப்புசாமியே பதில் சொன்னார். “அடுப்பில் வைக்கும் சாமான்களைத்தவிர, மெட் டலில் செய்யும் எல்லாப் பொரு ளுமே பிளாஸ்டிக்லயும் விதவிதமா வந்துட்டு இருக்கு. இதில்லாம, ஒரு முறை மட்டும் பயன்படுத்திட்டுத் தூக்கிப்போடுற பொருள்களும் வரத்து அதிகமாகிருச்சு.
பாத்திரம் அடிக்கிறார்கள் (முதல் படம்)... குப்புசாமி (இரண்டாவது படம்)
தாமிரப் பாத்திரங்களுக்கு வரவேற்பு
முன்னெல்லாம், கல்யாணம், காது குத்து, சடங்குன்னா, பெரிய பித்தளைப் பாத்திரத்தை வாங்கி, பேருவெட்டி எடுத் துட்டுப்போய் சீர்செய்யுறதை பெருமையா நினைச்சாங்க. இப்ப அப்படியா இருக்கு? தொட்டதுக்கெல்லாம் கிஃப்ட் ஆர்டிகிள்ஸ் வந்துருச்சு; இதுக்குன்னு தனியாவே கடைகளைத் திறந்துட்டாங்க. அந்தக்காலம் போல பாத்திரத்தை கழுவி, துடைச்சு வைக்க இந்த காலத்து பொம்பளைங்க தயாரா இல்லை. இதுபோன்ற காரணங்க ளாலதான் பாத்திரம் அடிக்கும் தொழில் பாதாளத்துக்குப் போயிட்டு இருக்கு.
அதுவும் போதாதுக்கு, இந்தப் பகுதியில பனியன் கம்பெனிகளின் அபரி மிதமான வரத்தால் பாத்திரத் தொழிலில் இருந்த பலரும் தொழிலை மாத்திக்கிட்டுப் போயிட்டாங்க. தாமிரக் கலையத்துல தண்ணிய வெச்சுக் குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு நாட்டு வைத்தியருங்க சொல் றாங்க. ஆய்வாளர்களும் விஞ்ஞானப் பூர்வமா இது சரிதான்னு சொல்ல ஆரம் பிச்சிருக்கதால மக்களும் இப்ப தாமிரக் குவளைகளையும் பானைகளையும் தேடித் தேடி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, கடந்த ரெண்டு வருசமா இந்தப் பகுதியில தாமிரப் பாத்திரங்கள் விற்பனை நல்லா சூடு பிடிச்சிருக்கு” என்று முடித்தார் குப்புசாமி.