

* பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்திலும், அதற்குப் பிறகும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர், தொகுதி சார்ந்த கோரிக்கை குறித்து பேச பேரவைத் தலைவரிடம் வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார்.
*
தண்ணீர் கூட்டணி
மானியக் கோரிக்கை விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் காளிமுத்து பேசிக் கொண்டிருந்தபோது, நீலகிரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ், எதிர்வரிசையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் குறுக்கிட்டு, ‘‘எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர் அமைச்சர் கள் வரிசை யில் அமர்ந்திருக்கிறார்’’ என்றார்.
உடனே எம்எல்ஏ கணேஷ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட் டையன் எழுந்து, ‘‘நீலகிரிக்கு பவானி சாகரில் தண்ணீ்ர் வழங்கு வது குறித்துதான் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். தண்ணீருக் கான கூட்டணிதான்’’ என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.