‘தி இந்து’ இன் ஸ்கூல் சார்பில் ‘நீட்’ மாதிரி தேர்வு: மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்

‘தி இந்து’ இன் ஸ்கூல் சார்பில் ‘நீட்’ மாதிரி தேர்வு: மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்
Updated on
1 min read

‘தி இந்து’ இன் ஸ்கூல் மற்றும் நீட் அகாடமி சார்பில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக நீட் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘தி இந்து’ இன் ஸ்கூல், நீட் அகாடமி இணைந்து நீட் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, வேலூர் ஆகிய இடங்களில் வரும் 30-ம் தேதி நடக்கவுள்ள தேர்வை பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் எழுதலாம். இந்தத் தேர்வுக்கான பதிவுக் கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் http://thehindu.com/naat/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in