

திருநெல்வேலியில் மாணவர்கள் கேலி செய்ததால் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். 20 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 5 மாணவர்களை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சுப்பிர மணியன் என்ற சதீஷ் (24). பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித் துள்ள இவர், திருநெல்வேலி அருகே யுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதே கல்லூரியில் கீழநத்தத்தை சேர்ந்த சுதாகர் (30) ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.
தாக்குதல்
பாலிடெக்னிக் கல்லூரியில் சில மாணவர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக சதீஷிடம், ஓட்டுநர் சுதாகர் கூறியுள்ளார். அந்த மாணவர்களை சதீஷ் கண்டித்துள்ளார். ‘பெற்றோரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும்’எச்சரித்தார். அப்போது அந்த மாணவர்கள் சதீஷை தாக்க முற்பட்டனர். அதை ஓட்டுநர் சுதாகர் தடுத்தார்.
புதன்கிழமை மாலை சதீஷ் தனது வீட்டில் இருந்தபோது, காரில் வந்த மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட் டாயமாக காரில் அழைத்துச்சென்றனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வைத்து அவரை கேலி, கிண்டல் செய்து தாக்கியுள்ளனர்.
வெகுநேரமாகியும் சதீஷ் வீடு திரும் பாததால், அவரைத் தேடி அவரது தம்பி அருண் அங்கு சென்றார். அப்போது, அவரையும் மாணவர்கள் தங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் எச்சரித்துவிட்டு, மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தற்கொலை
போலீஸில் புகார் செய்யலாம் என்று சதீஷ் வீட்டில் தெரிவித்தபோது, பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. வெறுப்படைந்த சதீஷ் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கு போட்டு தற் கொலை செய்துகொண்டார். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியர் சதீஷை தாக்கிய மாணவர்கள் சிலர், கீழநத்தத்தில் உள்ள கல்லூரி வேன் ஓட்டுநர் சுதாகர் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது மனைவி செல்வியையும் தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த இத்தம்பதி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மீது வழக்கு
சதீஷை தற்கொலைக்கு தூண்டிய தாகவும் அவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் சுதாகர் மற்றும் செல்வியை கொலை செய்ய முயற் சித்தாகவும் செல்வியை மானபங்கம் செய்ததாகவும் மொத்தம் 20 மாண வர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வியாழக்கிழமை மாணவர்கள் மெர்லின் பாபு(20), செல்வம்(19), தில்லைகுமார்(23), பிரதீப்(22), பிரிகேன்ஸ்(20) ஆகி யோரை போலீஸார் கைது செய்தனர்.
அடுத்த பரபரப்பு
நெல்லை அருகே வல்லநாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தனியார் பொறியியல் கல்லூரி முதல் வரை, மாணவர்களே வெட்டிக் கொலை செய்த சம்பவத்தின் தாக்கம் அடங்கு வதற்குள், இப்போது ஆசிரியரை மாணவர்களே தற்கொலைக்கு தூண்டி யிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.