அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான நேர்காணல்: சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான நேர்காணல்: சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது
Updated on
1 min read

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 12 அல்லது 10-ம் வகுப்பு / டிப்ளோமா கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-ல் இருந்து 65 வயது. அஞ்சல் அலுவகத்தில் தொடர் வைப்புத்தொகை முகவர்களாக இருக்க வேண்டும்.

வேலையில்லா, சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் ஆயுள் காப்பீட்டுக் குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர் கள், முன்னாள் முகவர்கள், அங்கன் வாடி மற்றும் மகிளா மண்டல் பணி யாளர்கள், சுய உதவிக் குழுக்கள், ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஏதேனும் காப்பீட்டுக் குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன் னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட வர்கள் நேர்காணலில் பங்கேற்க லாம். தொழில் செய்ய விரும்பும் அஞ்சல் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் சென்னை நகரம், தாம் பரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் வசிப்பவராக வேண்டும்.

நேர்காணலின் போது...

இந்தப் பணிக்கான நேர் காணலை அஞ்சல் துறை, தலைமை அஞ்சல் அலுவலர், சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் நேர்காணலின்போது தங்கள் கல்வி தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் இரண்டு புகைப் படங்களை சமர்ப்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அஞ்சல் துறைக்கு ரூ.250 உரிமத் தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் செய்ய விரும்பும் அஞ்சல் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் சென்னை நகரம், தாம் பரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் வசிப்பவராக வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in