அனைவருக்கும் வீடு திட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லை: பேரவையில் அமைச்சர் விளக்கம்

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லை: பேரவையில் அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு கிடையாது. அதிகாரி களே நேரடியாக பயனாளி களுக்கு ஒதுக்கீடு செய்கின்றனர் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ் ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேர வையில் நேற்று நடந்த விவாதம்:

வி.ஜி.ராஜேந்திரன் (திமுக):

கடந்த 2012-ல் வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டத்தில் 11 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியில் 25 லட்சம் வீடுகள் உலகத் தரத்தில் கட்டி வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்படியானால் தற்போது 11 லட்சம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு கட்டப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ் ணன்:

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பான ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டு, பொதுமக்களே தங்கள் வீடுகளைக் கட்டும் திட்டத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், மறைந்த முதல்வர் அறிவித்த 10 லட்சம் வீடுகள் திட்டத்தில், வரும் டிசம்பருக்குள் 5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.

ராஜேந்திரன்:

அறிவிக்கப்பட்ட 25 லட்சத்தில் 11 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டுமே?

அமைச்சர் ராதாகிருஷ்ணன்:

வீட்டு வசதித் துறை மட்டுமின்றி, உள்ளாட்சி உள்ளிட்ட இதர துறைகளின் கீழ் கட்டப்படும் வீடுகளையும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

உள்ளாட்சிகளில் வீட்டு வசதி திட்டத்தில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. மத்திய அரசைவிட அதிக நிதி, தமிழக அரசால் ஒதுக்கப்படுகிறது.

ராஜேந்திரன்:

இ-சேவை மையங்கள், தனியார் கணினி மையங்களில் வீட்டுக்கு விண் ணப்பிக்க பொதுமக்கள் வரிசை யில் காத்திருக்கின்றனர். இதில், இடைத்தரகர்கள் நுழைந்து ஏமாற்றுகின்றனர்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன்:

ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில், விண்ணப்பம் கிடைத் ததும் அதிகாரிகளே சம்பந்தப் பட்டவர்களை நேரடியாக அழைத்து அவர்களுக்கு தேவை யானவற்றை செய்து தருகின் றனர். இதில் இடைத்தரகர்கள் தலையீடு எப்போதும் இல்லை.

ராஜேந்திரன்:

குடிசை மாற்று வாரிய ஒதுக்கீடு பெற்றவர்க ளுக்கு கிரையப்பத்திரம் வழங்கப் படவில்லை.

அமைச்சர் ராதாகிருஷ்ணன்:

கடந்த 6-ம் தேதி நடந்த கூட்டத் தில் இது தொடர்பாக முடிவெடுக் கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட நிலங்கள் வகை மாற்றம் செய் யப்பட்டதும், விரைவில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப் பத்திரம் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in