

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சுமித்ரா (39). செல்போன் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஜெ.ஜெ.நகர் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் சுமித்ரா, தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
ஜெ.ஜெ.நகர் கிழக்கு திருவள்ளூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 இளைஞர்கள் சுமித்ராவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜெ.ஜெ நகர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். முதல் கட்டமாக செயின் பறிப்பு நடந்த இடத்தில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீஸார் ஆராய்ந்தனர். அதில், செயின் பறிப்பு திருடர்களின் உருவம் துல்லியமாக பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் பணி நடந்து வருகிறது.