காக்களூர் தொழிற்பேட்டையில் ரசாயன வாயு திறப்பால் பொதுமக்கள் அவதி

காக்களூர் தொழிற்பேட்டையில் ரசாயன வாயு திறப்பால் பொதுமக்கள் அவதி
Updated on
1 min read

காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் ரசாயன வாயு திறந்துவிடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் ரசாயன வாயு திறந்துவிடப்படுவதாகவும் இதனால் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

‘‘காக்களூர் தொழிற்பேட்டையைச் சுற்றி ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இரவு நேரத்தில் இந்த தொழிற் பேட்டையில் உள்ள சில தொழிற் சாலைகளில் இருந்து ரசாயன வாயு திறந்துவிடப்படுகிறது. அது காற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் தொழிலாளர்கள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, சிட்கோ நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை’’ என்றனர்.

மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி களிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘இப் பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்யும் தொழிற் சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in