தமிழக பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டம் இல்லை: அமைச்சர் விளக்கம்

தமிழக பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டம் இல்லை: அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கையில், விருதுநகர் தொகுதி திமுக உறுப்பினர் சீனிவாசன், ‘‘பஞ்சாலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பெண் கள் அடைத்து வைக்கப்படுகின்ற னர். கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன. மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச் சர் நிலோபர் கபீல், ‘‘பஞ்சாலை களில் பெண்கள் வஞ்சிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டது. சுமங்கலி திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மாவட்ட ஆட்சி யர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பெண் தொழி லாளர்களுக்கு பணி விதிமுறை கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1 முதல் அமல்

இது தொடர்பாக பஞ்சாலை களுக்கு உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன. எனவே சுமங்கலி திட்டம் தற்போதைக்கு இல்லை. மேலும், வேலை பழகுநருக்கு 330 ரூபாய் 60 காசுகள் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதியம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத் தப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘எந்த பஞ் சாலையில் வெளிமாநில தொழி லாளர்கள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர் என்பதை தெரி வித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in