வருமானவரித் துறை சோதனை என்ற பெயரில் மதுரை மாநகராட்சி அதிகாரி வீட்டில் 40 பவுன், ரூ.45 ஆயிரம் நூதன கொள்ளை

வருமானவரித் துறை சோதனை என்ற பெயரில் மதுரை மாநகராட்சி அதிகாரி வீட்டில் 40 பவுன், ரூ.45 ஆயிரம் நூதன கொள்ளை
Updated on
1 min read

மதுரையில் பட்டப் பகலில் மாநகராட்சி அதிகாரி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் போல நடித்து சோதனையில் ஈடுபட்ட 2 பேர் 40 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர், 9-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வீரன் (எ) வீரணன்(45). இவர் மாநகராட்சியில் துப்புர வுப் பிரிவு ஆய்வாளராக பணி புரிகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு புறப் பட்டுச் சென்ற நிலையில், அவரது மனைவி தனலட்சுமி(41) மட்டும் வீட்டில் இருந்துள்ளார். காலை சுமார் 10.30 மணியளவில் அறி முகம் இல்லாத 2 பேர் வீரணனின் வீட்டுக்கு காரில் வந்துள்ளனர். ஒருவர் காவல்துறையினர் போன்ற சீருடையிலும், மற்றொரு வர் ‘சீக்கியர்’ சமூகத்தைச் சேர்ந் தவர் போலவும் தலைப்பாகை அணிந்திருந்தார்.

வருமானவரித் துறையில் இருந்து வருவதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட இரு வரும், வீரணனை ஏற்கெனவே எங்கள் அதிகாரிகள் ரகசிய இடத் தில் வைத்து விசாரித்து வருவ தாக தெரிவித்துள்ளனர். வீட்டை சோதனையிட வேண்டும் எனவும், வீட்டில் உள்ள பொருட்களின் விவரங்களை மறைக்காமல் கூறுமாறும் கேட்டுள்ளனர்.

வீட்டுக்குள் ஆய்வுசெய்வது போல நடித்துள்ளனர். அதன்பின் நகைகள் மற்றும் பணத்தை எடுத்து வருமாறு தனலட்சுமியிடம் கண்டிப்புடன் கூறினர். அவரும் 40 பவுன் நகைகள், ரூ.45 ஆயி ரத்தை எடுத்து வந்து கொடுத் துள்ளார். இருவரும் சிறிய தராசு மூலம் நகைகளை எடை போட்டுள்ளனர்.

பின்னர், நகைகள் மற் றும் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றனர்.

சிறிதுநேரம் கழித்து தனலட்சுமி வீரணனை தொடர்பு கொண்டுள் ளார். அப்போது அவர் வழக்க மாக பணியில் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, முழு விவரங் களையும் கணவரிடம் தெரி வித்தார்.

இதுகுறித்து வீரணன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்கள் வந்த காரின் எண் போலியானது என விசா ரணையில் தெரியவந்தது. குற்ற வாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in