நாளை குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

நாளை குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
Updated on
2 min read

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நாளை நடக்கிறது. தமிழக எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத் தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியு டன் முடிவடைகிறது. இதை யடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (17-ம் தேதி) நடக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி., எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

தமிழக எம்எல்ஏக்கள் வாக் களிப்பதற்கான ஏற்பாடுகள் சென்னை தலைமைச் செயலகத் தில் தீவிரமாக நடந்து வருகின் றன. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற் காக டெல்லியில் இருந்து 2 வாக்குப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டு களை போடுவதற்கு ஒரு பெட்டி மட்டுமே வைக்கப்படும். மற்றொரு பெட்டி அவசர தேவைக்காக தயார் நிலையில் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

எம்எல்ஏக்கள் வாக்களிக்க செல்ல வேண்டிய வழி, வாக் களிக்கும் முறை குறித்த அறிவிப்பு பலகைகள் நேற்று தலைமைச் செயலகத்தில் வைக் கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சட்டப்பேரவை செயலாளர் (பொறுப்பு) க. பூபதி, பேரவைச் செயலக இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள அன்சு பிரகாஷ், டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலை யொட்டி தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நடக்கும் அறை, பேரவை தலைவர், செயலாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடக்கும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அறைக்குள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி கிடையாது.

ஓட்டுச் சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் அதிகாரி கொடுக்கும் பேனாவை மட்டுமே பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும். எம்எல்ஏக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அனைவருக்கும் கடிதம் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடும் இடத்துக்கு யாரையும் உடன் அழைத்துச் செல்ல முடி யாது. வாக்களிக்கும்போது அடை யாள அட்டையை உதவி தேர்தல் அதிகாரியிடம் எம்எல்ஏக்கள் காட்ட வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க் கள், தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று இங்கேயே வாக்களிக்க முடியும். ஆனால், எம்.பி.க்கள் அனைவரும் டெல்லிக்கு சென்று நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு நாளை இரவே விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிறப்புப் பார்வையாளர் பிரகாஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சட்டப்பேரவை செயலாளர் பூபதி, காவல் துறை கூடுதல் ஆணையர் ஜெயராம், இணை ஆணையர் சுதாகர் (வடக்கு) ஆகியோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தையும் சிறப்புப் பார்வையாளர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in