

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் திங்கட்கிழமை மாலை நேரில் சந்தித்துப் பேசினர். பொதுக்கல்விக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை மாணவர்கள் காண்பித்தனர்.
பின்னர், தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், தமிழக அரசின் 85% இடஒதுக்கீட்டால் பயன்பெற்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த மாணவர்களின் பெற்றோர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.