ஆசிய போட்டியில் பதக்கம் தமிழக வீரர்களுக்கு பாராட்டு

ஆசிய போட்டியில் பதக்கம் தமிழக வீரர்களுக்கு பாராட்டு
Updated on
1 min read

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற லட்சுமணன், கோபிக்கு குன்னூரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றன. இதன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

தமிழகத்தைச் சேர்ந்த ஜி.லட்சு மணன் 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டி.கோபி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர்கள் இருவரும் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் (எம்ஆர்சி) பணிபுரிந்து வருகின்றனர்.

தடகளப் போட்டிகள் நிறைவ டைந்து நேற்று இருவரும் வெலிங்டன் ராணுவ மையம் திரும்பினர். குன்னூர் வந்த அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் காந்தி சிலை பகுதியில் திறந்த ஜீப்பில் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

ஹாக்கி நீல்கிரிஸ் தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in