

காய்கறிகள் திடீர் விலையேற்றத் தால் நடுத்தர, ஏழை மக்கள் அவற்றை அன்றாட உணவில் சேர்க்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.
உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது காய்கறிகள், பழங்கள். இதற்கு அடிப்படை காரணம் எண்ணெயும், உப்பும் காய்கறிகளில் கிடையாது. இந்த இரண்டும் இருப்பதாலேயே, மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் 14 லட்சம் ஹெக்டேரில் காய் கறிகள் சாகுபடியாகின்றன. இதில் மலைத்தோட்டங்களில் விளை விக்கக் கூடிய பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, காளி பிளவர் உள்ளிட்ட காய்றிகள் விலை அதிகம்.
ஏனென்றால் இந்த காய்கறிகளை சமவெளி பகுதிகளில் விளைவிக்க முடியாது. விளைகிற பரப்பு குறைவு. தற்போது வறட்சியும் நிலவுவதால், பரவலாக அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து இரண்டு மடங்காகிவிட்டது. அதனால், நடுத்தர, ஏழை மக்களுக்கு காய்கறிகள் அந்நியமாகி வருகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி- ரூ.60, பீன்ஸ்- ரூ.80, அவரைக்காய்- ரூ. 50, காரட்- ரூ. 100 , சின்ன பாகற்காய்- ரூ.100, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ்- ரூ. 70, சின்ன வெங்காயம்- ரூ. 70 முதல் ரூ. 100 வரை என எல்லா காய்கறிகளும் உச்ச விலையில் விற்பனையானது. சில்லறைக் கடைகளில் விலை இன்னும் கூடுதலாக விற்கப்படுகிறது. ஏற்கெனவே, ஆடு, கோழி, இறைச்சி, மீன்கள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அவற்றை அடிக்கடி வாங்கி சாப்பிட முடியவில்லை. இந்நிலையில், காய்கறிகளின் விலையேற்றத்தால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை பேராசிரியர் ஒருவர் கூறி யதாவது:
ஒரு மனிதனுக்கு அன்றாட உணவில் 400 கிராம் காய்கறி தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் 80 கிராம் முதல் 120 கிராம்தான் சாப்பிடு கிறோம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் உண வுகளில் தினமும் ஏதாவது ஒரு வகையில் காய்கறிகளை சமைக்காமல் அப்படியே சாப்பிடுகின்றனர். வேக வைக்காமல் சாப்பிடுவதால், அவர்களுக்கு தேவையான சத்துப்பொருட்கள் அந்த காய்கறிகளில் இருந்து கிடைக்கின்றன.
டெல்லி, ஹரியாணா, பிஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய வடமாநிலங்களில் சப்பாத்தி போன்ற உணவுகளில் காய்கறிகளை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள் கின்றனர்.
அப்படி சாப்பிடுவதால் புரதச் சத்து, வைட்டமின், மினரல் என்று சொல்லக்கூடிய தாது உப்புகள் தேவையான அளவு அவர்களுக்கு கிடைக்கிறது.
தரமான காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியமானது. ஆனால், இவை கிடைக்காமல் போவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று விலையேற்றம், மற்றொன்று ஏழ்மைதான்.
தமிழகத்தில் 35 வகையான காய்கறிகள் விளைவிக்கப்ப டுகின்றன. இவற்றை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிட முடியாமல் போ வதற்கு அடிப்படை காரணம் விலையேற்றம்தான்.
வாரம் 300 ரூபாய்க்கு காய்கறி வாங்கியவர்கள், தற்போது 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முன்பு வாரத்திற்கு கிலோ கணக்கில் காய் கறி வாங்கியவர்கள், அரை கிலோ, கால் கிலோ அளவில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாமே காய்கறிகளை உற்பத்தி செய்யலாமே..!
வேளான் பேராசிரியர் மேலும் கூறுகையில், நடுத்தர, ஏழை மக்கள், வீடுகளிலேயே தரமான காய்கறிகளை உற்பத்தி செய்து பிரெஷ்ஷாக சமைத்தோ அல்லது வேக வைக்காமலோ சாப்பிடலாம். வீட்டைச் சுற்றி இருக்கும் காலி இடங்களில் முருங்கை மரம், கீரைச் செடிகள், கொஞ்சம் காய்கறிகளை விளைவிக்கலாம். நிலம் இல்லாதவர்கள், மாடித்தோட்டம் அமைத்தும் காய்கறிகளை விளைவிக்கலாம். இதற்கு தோட்டக்கலைத் துறை தற்போது மாடித்தோட்டம் என்ற பெயரிலேயே, அருமையான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதற்கான ஆலோசனையும் அவர்களே வழங்குகின்றனர்.
காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வதால் உடலுக்கு பயிற்சியாகவும் ஆகிறது. ரசாயன கலப்பில்லாத இயற்கை காய்கறிகளை சாப்பிடலாம்.
வெளிநாடுகளை போல குழந்தைகளிடம் காய்கறிகள் சாப்பிடும் பழக்கத்தை பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். இதையெல்லாம், பின்பற்றினால் வாழ்நாள் கூடும். ஆனால், இந்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்றார்.