

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத் தில் ரூ. 430 கோடியில் 10 ஆண்டு கால செயல் திட்டமாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் அமைக்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை யில் நேற்று கேள்வி நேரம் முடிந் ததும் விதி 110-ன்கீழ் முதல்வர் வெளி யிட்ட அறிவிப்புகள் வருமாறு:
தற்போது நிலவிவரும் வறட் சியை கருத்தில்கொண்டு குறைந்த நீரில் அதிக விளைச்சலும், அதிக வருமானமும் தரும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, நடப்பாண்டில் 22 மாவட்டங் களில் தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறி பயிர்களில் வீரிய ஒட்டு ரகங்கள், உயர் விளைச்சல் ரக சாகுபடி 11,250 ஏக்கரில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ. 9 கோடி ஒதுக்கப்படும்.
இதன்மூலம் சுமார் 2,250 விவ சாயிகள் பயன்பெறுவர். இதற்காக வீரிய ஒட்டு ரக விதைகள், குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட காய்கறி நாற்றுகள் 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படும்.
சூரிய சக்தி பம்ப் செட்
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.102 கோடி மானியத்தில் 2,826 சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்கள் நிறுவப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 1,000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்ப்செட்கள் வழங்கப்படும். இதில் 30 சதவீத மானியம் அதாவது ரூ.15 கோடியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலமும், மீதமுள்ள 60 சதவீத மானியம் அதாவது ரூ.29 கோடியே 94 லட்சம் வேளாண் பொறியியல் துறை மூலமும் வழங்கப்படும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளா கத்தில் ரூ.430 கோடியில் 10 ஆண்டு கால செயல் திட்டமாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் அமைக்கப்படும். நடப் பாண்டில் இதற்காக ரூ.51 கோடி செலவிடப்படும். நொதிகள், பழுக்க வைக்கும் உயிரி ஹார்மோன்கள், செடிகளின் சீரமைப்புக்கான நொதி கள் போன்ற உயிரி வேளாண் இடுபொருட்கள், வேளாண் மூலக் கூறுகள், உயிரி செயலாக்க முறைகள் ஆகியவை வணிக ரீதியாக விவசாயிகளுக்கு பயன் படும் வகையில் பொது, தனியார் நிறுவன கூட்டு முயற்சியுடன் உருவாக்கப்படும்.
தோட்டக்கலை விளைபொருட் களை தரம் பிரித்து சிப்பம் கட்டி, விநியோகத் தொடர் மேலாண்மையை மேம்படுத்து வதற்காக நடப்பாண்டில் பண்ணை அளவில் தலா ரூ.2 லட்சத்தில் 597 சிப்பம் கட்டும் அறைகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.11 கோடியே 94 லட்சம் ஒதுக்கப்படும்.
நடப்பாண்டில் 160 வேளாண் விரிவாக்க மையங்கள் ரூ.48 கோடியில் சீரமைக்கப்படும். திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி, குடுமியான்மலை, ஈச்சங்கோட்டை, வாழவச்சனூர் ஆகிய இடங்களில் உள்ள வேளாண் கல்லூரிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக மையங்களில் அடிப்படை வசதி கள், விதை மையம் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் ரூ.108 கோடியில் ஏற்படுத்தப்படும். தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் நடப்பாண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.