Published : 09 Nov 2014 12:48 PM
Last Updated : 09 Nov 2014 12:48 PM

வெளி மாநில தொழிலாளர் விவரம் போலீஸில் கொடுப்பது கட்டாயம்: குற்றங்கள் அதிகரிப்பால் நடவடிக்கை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் பற்றிய முழு விவரங்களையும் அருகே உள்ள காவல் நிலையத்தில் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்களாக உள்ளனர். பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் வெளி மாநிலத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்கும் வகையில் காவல் துறை மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டது.

இதை தடுப்பது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. கட்டுமான நிறுவன அதிகாரிகள், தொழி லாளர் நலத்துறை அதிகாரிகள், வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் முகவர்கள் கலந்துகொண் டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் பற்றிய முழு விவரங்களையும் அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்தில் கட்டாயம் கொடுக்க வேண்டும். இது முகவர்கள், கட்டுமான நிறுவனங்களின் முதல் பணியாக இருக்கவேண்டும் என்று கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x