

நடந்து முடிந்த 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்கவில்லை.
94 வயதாகும் கருணாநிதி 1957-ல் முதல் முதலாக எம்.எல்.ஏ.வானார். அன்றுமுதல் நடைபெற்ற அனைத்து குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் அவர் வாக்களித்துள்ளார். 1977-ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி எதுவும் இல்லாததால் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. கடந்த 2012 குடியரசுத் தலைவர் தேர்தல் வரை வாக்களித்த கருணாநிதி, தற்போது உடல்நலக் குறைவு காரணமாக வாக்களிக்க வில்லை. பல்வேறு தேர்தல்களில் குடியரசுத் தலைவரை தீர்மானிக் கும் சக்தியாக இருந்தவர் கருணா நிதி என்பது குறிப்பிடத்தக்கது.