ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு தொடரப்படும்: அர்ஜூன் சம்பத்

ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு தொடரப்படும்: அர்ஜூன் சம்பத்
Updated on
1 min read

ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அரசியல் தொடர்பாக ரஜினியை மீண்டும் சந்தித்துப் பேச உள்ளேன். அவர் அரசியலில் நிச்சயம் மாற்றங்களை நிகழ்த்துவார். ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்'' என்றார்.

முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமி, ''ரஜினிகாந்த் படிப்பறிவு அற்றவர் என்றும் அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 19-ம் தேதி ரஜினியை அர்ஜூன் சம்பத் நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ''நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார் . அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டிய தருணம் இது'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ரஜினியை சந்திக்க உள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in