மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Published on

மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்தபோது வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

''மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் 6.79 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் மக்கள் தொகை நெருக்கத்தை குறைக்கவும், சென்னையைச் சுற்றி அதிவேகமாக நகர்மயமாகி வரும் பகுதிகளின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தையும் உள்ளடக்கி 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் அளவில் சென்னைப் பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும்'' என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in