Published : 19 Jul 2017 08:39 AM
Last Updated : 19 Jul 2017 08:39 AM

குண்டர் சட்டத்தில் மாணவி வளர்மதி கைது: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு தமிழக அரசியல் கட்சித் தலை வர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்):

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து போராடி வந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. காவல் துறை மூலம் அடக்குமுறையில் ஈடுபடும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். வளர்மதி, திருமுரு கன் காந்தி ஆகியோருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும். மேலும் கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரையும் விடுவிக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். மத்திய அமைச்சர் மீது காலணி வீசிய நபருடனும் நக்சலைட்டுகளுடனும் அந்த மாணவிக்கு தொடர்புகள் இருப்பதாக கூறி, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள் ளனர். இது கண்டனத்துக் குரியது. வளர்மதி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதோடு அவரை விடுதலை செய்ய வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):

நெடு வாசல், கதிராமங்கலத் தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பரப்புரை செய்த மாணவி வளர்மதியை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீது நக்சல்பாரி முத்திரை குத்தி குண்டர் சட்டத்தையும் ஏவி இருக்கிறது. அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்ப தாகும். எனவே மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்):

மாணவி வளர்மதி நக்சலைட் இயக்கத்துக்கு ஆள் சேர்த்தார் என்ற பொய்யான காரணத்தைக் கூறி காவல்துறை அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது. இது ஜனநாயக படுகொலை ஆகும். தமிழக மக்களின் நலன்களை காக்கவே தமிழக அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உரிமைக் குரலெழுப்பும் இளைஞர்கள் மீது புதுப்புது சட்டங்களின் மூலம் வழக்கைப் பதிவு செய்து அவர்களது குரல் வளையை நசுக்கக் கூடாது.

இவ்வாறு தலைவர்களின் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x