

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட குறு, சிறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உறுப்பினர் எ.வ.வேலு கோரியுள்ளார். இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மேற்கொண்டு விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்பாகி விடும். நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் அரசு உரிய நடவடிக்கை எடுக் கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.