வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் தகுதி வாய்ந் தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப் பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி களிலும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறை வடைந்த இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட் டவர்களின் பெயர்களை வாக் காளர் பட்டியலில் சேர்க்கும் பணி ஜூலை 1-முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.எனவே, 18 முதல் 21 வயது டைய இளம் வாக்காளர்கள், இந்த முகாமில் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டி யலில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஆர்.லலிதா தலைமையில், கைபேசி செயலி வழியாக வாக்காளர் பட்டியலை திருத்து வது தொடர்பான பயிற்சி, வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களுக்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று வழங்கப் பட்டது. அதில் பெயர் சேர்த்தல், திருத்தம், புதிய புகைப்படங்கள் பதிவேற்றம் மேற்கொள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in